Anuammu
Active member
- Joined
- Feb 21, 2026
- Messages
- 154
Hi sis..
நான் முதன் முதலில் மல்லிக்காம்மா தளத்தில் தான் உங்களது பரிபூரணி படித்தேன்...எதேர்ச்சையாக படிக்க ஆரம்பித்தது தான்... ஆனால் இன்றளவும் மனதை விட்டு நீங்கவில்லை...
வீராவின் கதையின் பெயர் மறந்து விட்டேன் ஆனால் வீராவும் அவனின் மஞ்சள் மலரும்... அவனின் மலரே என்ற விளிப்பும் அவ்வவ்ப்போது ஃப்ளாஷ் ஆகும்....
அந்த கதையின் இன்னொரு நாயகன் மூலமாக எம்பதி என்ற வார்த்தையை அறிந்தேன்...திருமணத்தினத்தன்று இவனது இந்த குணத்தை கண்டு நாயகி எங்கே தன்னை தன் முதல் கணவரிடம் விட்டு கொடுத்து விடுவானோ என்று பயம் கொள்ளும் இடம் மறக்கவே முடியாதது....
பிரிக்க முடியாதது எதுவோ?? மழையும் -தேவியும் தான் சொல்லனும்... உங்கள் கதைகளில் ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய சோ வென்ற மழையும் ஒரு கதாப்பாத்திரமாக வருவதற்க்கு தவறுவதில்லை...
எதிர்மறை காதாபாத்திரங்கள் கூட இப்படி இருப்பார்களா என்ற ஆதங்கத்தை தூண்டுவார்கள் அன்றி வெறுப்பான எதிர்மறையான மனநிலையை தோற்றுவிக்க வில்லை...
நாயகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்??.... இத்தனை அன்பும் ஆசையும் ஆர்வமும் தன் துணை மேல் ஒரு ஆணால் கொட்டிக்கொடுக்க முடியுமா??.. யாரும் சூப்பர் ஹீரோ இல்லை... சாதாரண ப்ளஸ் மைனஸ் உள்ள மனிதர்கள் தான்.. ஆனால் அவர்களின் பிரியத்தை வார்த்தையில்... செயலில் காண்பிக்கும் நொடியில் என்னை அறியாமல் பெருமூச்சு வருவதை தவிர்க்க முடியவில்லை....
நாயகிகள் காதல் செய்வது ஒன்றே என் கடன் என்றில்லாம்மல்...தனக்கான தனித்துவத்துடன் திறமையுடன் ஜொலிக்கிறார்கள்....
சில இடங்களில் எனக்கு நீங்கள் காஞ்சனாஜெயதிலகரை ஞாபகப்படுத்துவீர்கள்...
மொத்தத்தில் நான் படித்த உங்கள் கதைகள் மனதிற்க்கு இதமும் நினைவிற்க்கு குளுமையும் சேர்ப்பவை...

Last edited: