Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
Welcome to KadhaiCafe ☕
Where every page carries a story
and every story leaves an aroma.
Make your காஃபி நேரம், கதை நேரம்.
சுடச் சுட காஃபி,
சிறு சிறு கதை,
பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
"A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
"பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
உருவம் கொள்ளும் முன்னே
உருக்குலைந்து
உதிர்ந்து போனதேன்
உயிரே.....
உணர்வுகளின் கதறல்
உள்ளுக்குள் பதற
உடன் உறவுகள் இருந்தும்
உயிரான இரு நெஞ்சம்
உண்மையில் சிதற....
உனக்கு நான்
உன்னில் நான் என
உறுதியான வேராகவே
உயிரோடு பிடித்திருந்தது
உயிர்மூச்சு காதல்.....
காதல் தோற்றதென்று
கை விட்ட விதி கூட
காலம் திரும்பும் என்று
கணிக்கவில்லை...
காணாத தூரங்களில்
கட்டிய திருமணங்கள்
காற்றில் கரைந்துபோனது...
கானல் நீராய் இருந்த
கசப்பான நினைவுகள்
காலை மழை போல
கரைந்து மறைந்தது...
காத்திருந்த
ஒருதலை காதல் இன்று
கைகளில் கை கோர்த்து
காதலாக மலர்ந்தது...
உண்ணாமலை உண்மையான தாய் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
உறவாடும் பெண்மணி அல்ல...
உண்மையை பற்றென்று
உரக்கச் சொல்லும் உயர்ந்த பெண்மணி....
உறுதியான முடிவு எடுத்து
உலகத்தை சந்திக்க
உறுதுணை தர்ற
உறவாக.....
அக்கா தம்பி பாசம் அசத்தல்
அதைவிட ரோஸ் குட்டி
அருமை.....
நெஞ்சுக்குள் இருந்த நேசம்
நிழலாய் மறைந்த பாசம்
நிஜமாய் கொஞ்சம் மெதுவாய் துளிர்க்கிறது மங்கையின் மனதில்....
கவலையை மறக்க கற்றுக்கொள் ஒன்றை
கவனத்தை திசை திருப்ப...
தயா சூப்பர் துர்காவின் கவனத்தை
திருப்ப வண்டி ஓட்ட கற்றுத்தந்து
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள
தம்பியால் ஆனது.....
தயவு காட்டுங்க
தயா மேல் குறிஞ்சி யாத்தா...
தன் வாழ்வு என யோசிக்கும் முன் தந்தையின் உடல் நிலையும்
தாயின் புன்சிரிப்பும்
தவிப்புகளை தன்னுள்ளே மறைத்து திருமணத்துக்கு தயாராகும்
திருமண பெண்ணே தினம் தினம் அனுபவிக்க வேண்டுமோ துயரங்களை????
கேள்வியால்
கணவனை திணற வைக்கும் மனைவி
குறிஞ்சியாத்தா.....
தயாவை தெரியும்
தெரிந்து வயதில் இருந்து....
தன் கணவனாக தன்னை புரிந்த
தயா சற்றே வித்யாசமாக தெரிகிறான்....
தள்ளி நிற்கிறான்
துணை கொள்கிறான்
கெஞ்ச வைக்கிறான்
கொஞ்சவும் செய்கிறான்....
பிடிக்காத திருமணம் உனக்கு என
பல முறை பரிகாசம்...
தாய் தந்தை துணை இருக்க
தம்பி தூணாக தாங்கும் சக்தியாக இருக்கு
தம்பி மனைவி தோழியாக தோள் கொடுக்க
தன் மகள் அழகான வாழ்வை தந்திட
தவறாக எப்படி நினைத்துடுவார்கள் துர்கா???
தப்பை மறைப்பதும் தப்புக்கு துணை போகுவது போல....
திருந்தாத ஜென்மம்
தொலைந்தது
தொல்லை என்று நினைத்து
நல்ல முடிவை சொல்.....
பிரபாவை பிடித்திருக்கு பார்த்திபனுக்கு...
பாரியை பிடிக்கவில்லை பாருவிற்கு.....
பிடித்தவர்களின் ஜோடியை
பிரிக்காமல் திருமணம் நடக்குமா???
பிடிக்காதவர்களின்
மனதை புதைத்து திருமணம் நடக்குமா???
பிரிவு எங்கு வந்தாலும்
பரிதவிக்கும் மனது....
திருமணம் நடக்க வேண்டும்
பிடித்தத்துடன்....
படபடப்பாய்...
விழிகளில்
விதைத்த காதல்
விழுந்ததே உன்னிடம்…
வார்த்தைகளில் சொல்லி விட்டாலும்
விலகி சென்றேன்....
விருப்பமாய் உன்னை நேசித்தேன்
விதியோ எனக்கில்லை என்றது....
விடாமல் விதி நம்மை
விழியில் விழ செய்து
வலியை கூட்டுகிறது...
விழித்திருக்கும் இரவுகள் எல்லாம்
வலியாய்....
வதைக்கிறது உன் நினைவுகள்
வழி...